மேலும் செய்திகள்
பிராமணர் சங்கம் பஞ்சாங்கம் வழங்கல்
25-Mar-2025
மதுரை: தாம்பிராஸ் எஸ்.எஸ்.காலனி டிரஸ்ட், தமிழ்நாடு பிராமணர் சங்கம் எஸ்.எஸ்.காலனி கிளை, இணைந்து உலக நன்மை கருதி மகா கணபதி, சுதர்சன, தன்வந்திரி, மகாலட்சுமி, நவகிரக ஹோமம் செய்து விஸ்வாவசு வருஷத்திய வாக்கிய பஞ்சாங்கம் வெளியீட்டு விழாவை நடத்தின.சிவகுமார் சர்மா அவர்கள் தலைமையில் வேதவிற்பனர்கள் ஹோமங்கள் செய்தனர். சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பஞ்சாங்கத்தின் முதல் பிரதியை வெளியிட விஸ்வாஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் சங்கர சீதாராமன் பெற்றுக் கொண்டார்.ஏற்பாடுகளை டிரஸ்ட் சேர்மன் கணபதி நரசிம்மன், மேனேஜிங் டிரஸ்ட் சீனிவாசன், அறங்காவலர்கள் ராமன், நாராயணன், சேகர், ஸ்ரீகுமார், ஜெயஸ்ரீ மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
25-Mar-2025