முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
எழுமலை: எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 படித்த மாணவர்கள் மீண்டும் சந்தித்தனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சாந்தா, உதவித் தலைமையாசிரியர் கிருஷ்ணன், ஆசிரியர்கள் நாகலட்சுமி, தங்கராஜ், முருகேசன், மகேந்திரன், பஞ்சவர்ணம், ரங்கநாயகி மற்றும் தற்போதைய ஆசிரியர்கள் முருகேசன், சிவகுமார், ஆறுமுகம், முன்னாள் அலுவலர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளியின் ஆசிரியரும், மாவட்டக் கல்வி அலுவலருமான செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முன்னாள் மாணவர் முத்துச்சாமி வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. காசிமாயன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை ராஜாராம், காளைராஜா தொகுத்து வழங்கினர்.