உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேகம்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே வடுகபட்டியில் முத்தாலம்மன், பகவதி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி காலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு யாகசாலை பூஜைகள் துவங்கின. அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ