உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஏட்டு கொலையில் மேலும் ஒருவர் கைது

ஏட்டு கொலையில் மேலும் ஒருவர் கைது

உசிலம்பட்டி:மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஏட்டு முத்துக்குமாரை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டி ஏட்டு முத்துக்குமார் மார்ச் 27ல், மதுக்கடை அருகே நடந்த தகராறில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கியக் குற்றவாளி பொன்வண்ணன் மார்ச் 29ல், தேனி மாவட்டம் கம்பம்மெட்டு மலையடிவாரத்தில் போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். மேலும், அவருடன் இருந்த சிவனேஸ்வரன், பாஸ்கரன், பிரபாகரன் ஆகியோரை கைது செய்து உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இந்தக் கொலை தொடர்பாக தேடப்பட்ட நாவார்பட்டியைச் சேர்ந்த பிரதாப்,24, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., முருகராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று பிரதாபை கைது செய்தனர். உசிலம்பட்டி டவுன் போலீஸ் ஸ்டேஷனில், விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ