ஊழல் தடுப்பு விழிப்புணர்வு
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் மாணவர்களுக்கு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முதல்வர் (பொறுப்பு) ஜார்ஜ் வரவேற்றார். துணைமுதல்வர் கபிலன் முன்னிலை வகித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சூர்யகலா, பாரதிபிரியா, குமரகுரு பங்கேற்று, 'ஊழலால் எவ்வாறு தனி மனிதரும், சமுதாயமும் பாதிக்கப்படுகிறது எனவும், ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் நாம் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டும்' என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊழல் எவ்வாறு குடும்பங்களை பாதிக்கிறது என்பதை விளக்கும் வகையில் மாணவர்களுக்கு படம் திரையிடப்பட்டது. ஊழல் தடுப்பு குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர். பேராசிரியர்கள் செந்தாமரைக்கண்ணன், முருகேசன், இணை பேராசிரியர்கள் சிவக்குமார், அகமது உட்பட பலரும் பங்கேற்றனர்.