ஊழல் தடுப்பு விழிப்புணர்வு
மதுரை: மதுரை நாராயணபுரம் பாண்டியன் சரஸ்வதி யாதவ் மெட்ரிக் பள்ளியில், தாளாளர் சரஸ்வதி தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் கணேசன் வரவேற்றார். ஊழல் தடுப்பு, கண்காணிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி., சத்திய சீலன் தலைமையில் இஸ்பெக்டர்கள் சூரியக்கலா, பாரதிப்பிரியா,குமரகுரு ஆகியோர், நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் லஞ்சம், அதைவாங்குவதால் ஏற்படும் விளைவுகள், அரசு பணிகளில் நேர்மையாக செயலாற்றுவது உள்ளிட்டவை குறித்து குறும்படம் மூலம் விளக்கினர். பள்ளி இயக்குநர் வரதராஜன், டீன் பார்வதி ஏற்பாடுகளை செய்தனர். பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லுாரி முன்னாள்உடற்கல்வி இயக்குநர் சீனிவாசன், பள்ளி ஒருங்கிணைப்பாளர் மீனா, ஆசிரியர்கள் சங்கீதா, கலைச்செல்வி, ஆஷா தேவி, அனுப்பிரியா, செல்வ சுதா, தாரணி, ஜலாலுதீன், ராஜேஷ், சரவணன் பங்கேற்றனர்.