உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு

மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு

மதுரை : மதுரை கிழக்கு ஒன்றியஎல்.கே.பி., நகர் அரசு பள்ளியில் மலேரியா எதிர்ப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சிதலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது.கள்ளந்திரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வேலுச்சாமி, இளநிலை பூச்சியியல் வல்லுநர் ராமு, சுகாதார ஆய்வாளர்கள் விக்னேஷ், சண்முகசுந்தரம், அருணாச்சலம் பங்கேற்று மலேரியா அறிகுறிகள், நோய்க்கான காரணம், பரவும் தன்மை, தடுப்பு வழிமுறைகள் குறித்து விளக்கினர். வினாடி வினாநடந்தது. மலேரியா எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். ஆசிரியர்கள் ராஜ வடிவேல், விஜயலெட்சுமி கலந்து கொண்டனர். ஆசிரியர் அனுசுயா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ