உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆப்பிள் ஐபோன் 17 சத்யா நிறுவனம் அறிமுகம்

ஆப்பிள் ஐபோன் 17 சத்யா நிறுவனம் அறிமுகம்

மதுரை: மதுரையில் சத்யா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வரவான 'ஐபோன் 17' ஐ அறிமுகப்படுத்தியது. ஓட்டல் ஜி.ஆர்.டி., கிராண்டில் நடந்த அறிமுக விழாவில் நடிகை கீர்த்தி ஷெட்டி பங்கேற்றார். அவர் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு புதிய அலைபேசிகளை வழங்கினார். சத்யா நிறுவன இயக்குநர் ஜாக்சன், பொது மேலாளர் வில்சன், சத்யா மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் ரோஷன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். புதிய 17 ப்ரோ வரிசை மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேமரா அமைப்பு, வேகமான ஏ 19 ப்ரோ சிப் மற்றும் ஐபோனில் இதுவரை இல்லாத அளவுக்கு நீண்ட பேட்டரி ஆயுள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதில் மொத்தம் 4 மாடல்கள் இருக்கின்றன. ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் உடன் புதிதாக ஐபோன் 17 ஏர் மாடலும் வெளியிடப்பட்டுள்ளது. காஸ்மிக் ஆரஞ்சு, அடர் நீலம் மற்றும் வெள்ளை(சில்வர்) ஆகிய மூன்று வண்ணங்களில் ஐபோன்கள் கிடைகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை