மாணவர்களுக்கு பாராட்டு
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு, விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அறிவுறுத்தல்படி இளைஞர் அணி அமைப்பாளர் விமல் ஏற்பாட்டில் நடந்த விழாவில் மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா தலைமை விருதுகள், ஊக்கத் தொகை வழங்கினார்.பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஜெயசூர்யா, சாய்விக்னேஷ், நவீனா, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற கர்ணராஜ், விஜயராஜ், ஜெயஸ்ரீ ஆகியோருக்கு விருது, உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர் கயல்விழி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் மருதம்மாள் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் சரவணகுமார் தொகுத்து வழங்கினார்.