உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றுவதில் வாக்குவாதம்

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றுவதில் வாக்குவாதம்

மதுரை: மதுரை நெல்பேட்டையில் 43 கடைகளுடன் மீன் மார்க்கெட் செயல்படுகிறது. இப்பகுதியை இடித்துவிட்டு 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் புதிய மார்க்கெட் கட்டுவதற்காக கடைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.மாநகராட்சி அலுவலர்கள் அங்கு சென்றபோது, கடைகளை அகற்ற மறுப்பு தெரிவித்து வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர். மேலும் வழக்கம் போல் வியாபாரத்திலும் ஈடுபட்டனர். 'மாற்று இடம் கொடுத்த பின்னரே மீன் மார்க்கெட்டை காலி செய்வோம் என்றும், அதுவரை வியாபாரம் பாதிக்கும்' எனவும் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் போலீசார், மாநகராட்சி அலுவலர்கள் நெருக்கடி கொடுத்தனர். வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் மாநகராட்சி கமிஷனர் சித்ராவிடம் மனு அளித்தனர். இதையடுத்து மார்க்கெட்டை இடிக்கும் பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை