உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி மாணவர்களுக்கு கலைப்போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கு கலைப்போட்டிகள்

மதுரை : கலைப் பண்பாட்டுத் துறையின் தமிழ்நாடு ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் 5 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கலைப்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.அவர்களின் திறன்களை வெளிக்கொணரும் வகையில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடன பிரிவுகளில் 5 முதல் 8 வயது, 9 முதல் 12 வயது, 13 முதல் 16 வயது பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. 9 முதல் 12, 13 முதல் 16 வயது பிரிவுகளில் மாவட்ட அளவில் முதல்பரிசு பெற்றவர்களுக்கு, மாநில போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்படுகிறது.அவ்வகையில் முதற்கட்டமாக மேற்கண்ட பிரிவுகளில் போட்டிகள் அக்.6 நடக்க உள்ளது. மதுரை ஆர்.எம்.எஸ்., ரோட்டில் உள்ள மதுரை கல்லுாரி மேல்நிலைப் பள்ளியில் காலை 9:00 மணி முதல் முன்பதிவு நடைபெறும்.பங்கேற்போர் பெயர், வயது, பிறந்ததேதி, முகவரி, பள்ளியின் பெயர் ஆகிய விவரங்களுடன் வயது சான்றிதழ் கொண்டு வரவேண்டும். ஓவியப் போட்டிகள் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரையும், மற்ற போட்டிகள் காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரையும் நடைபெறும். போட்டிகள் தொடர்பாக 0452- 2566 420 ல் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி