உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...

கண் வெள்ளை விழியில் எனது மகன் பச்சை குத்தி கொண்டார். தற்போது கண்வீக்கம் ஏற்பட்டு அவதிப்படுகிறார். என்ன செய்ய வேண்டும். கவிதா, பழனிசெட்டிபட்டி, சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் என நினைத்து பலரும் கண் வெள்ளை விழியில் பிடித்த வண்ணங்களை பச்சை குத்துகின்றனர். கண், மிகவும் மென்மையான உறுப்பு. பச்சை குத்துவதால் கண் வீக்கம், வலி, நிரந்தர பார்வை குறைபாடு ஏற்படும். பச்சை குத்தியதால் கண் வீக்கம் ஏற்பட்டால் உடனடியாக கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருந்து கடைகளில் கிடைக்கும் சொட்டு மருந்துகளை வாங்கி பயன்படுத்த கூடாது. டாக்டர் சராயு, கண் சிகிச்சை பிரிவு, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தேனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி