உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி வளாகத்தில் தாக்குதல்; மதுரையில் பரபரப்பு

பள்ளி வளாகத்தில் தாக்குதல்; மதுரையில் பரபரப்பு

மதுரை; மதுரை, பனங்காடி பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர், அருகேயுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார். சில நாட்களாக அவரை சக மாணவர்கள் சிலர் கேலி, கிண்டல் செய்ததோடு அநாகரிக செயல்களிலும் ஈடுபட்டனர். இதனால் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என பெற்றோரிடம் மாணவர் கூறினார்.அம்மாணவர்கள் குறித்து தலைமையாசிரியையிடம் தந்தையும், சித்தப்பாவும் நேரில் புகார் கூறினர். தலைமையாசிரியை அறையில் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடந்தது. அப்போது, சித்தப்பா ஒரு மாணவனை தாக்க, ஆத்திரமுற்ற சக மாணவர்கள் அவரை கடுமையாக தாக்கினர். அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியை இருதரப்பையும் கண்டித்தார். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த போலீசாரிடம், 'மாணவர்கள் கூல் லிப் பயன்படுத்துவதே இது போன்ற பிரச்னைக்கு காரணம். அதை தடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 'கவுன்சிலிங்' கொடுக்கப்பட்டது. தலைமையாசிரியை புகாரில் மாணவனின் சித்தப்பாவிடம் போலீசார் விசாரித்தனர். அவர் மன்னிப்பு கேட்டதால் புகார் வாபஸ் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

V RAMASWAMY
நவ 22, 2024 08:56

தமிழக மாணவர்களை நல்வழிப்படுத்த தேவையான அறிவுரைப் பாடங்கள் நடத்தாமல், அவர்களை தீய வழிகளிலும் குற்றங்கள் புரியும் வகையிலும் ஏராள வழிமுறைகள் உண்டாகியிருக்கின்றன. அந்த வலைகளில் சிக்கி திசை தெரியாமல் அவர்கள் குற்றம் புரியும் தீய வழிகளில் ஈடுபடுகிறார்கள். இது மிக அபாயகரமான விஷயம். கல்வியாளர்களும் அரசும் தீவிர ஆலோசனை செய்து மாணவர்களுக்கு நன்னெறிப் பாடங்கள் இளமையிலேயே கற்பிக்க ஏற்பாடு செய்வதோடு, குற்றம் புரியும் மாணவர்களுக்கு தக்க கடுமையான தண்டனையும் கொடுக்கவேண்டும். தண்டனை மற்ற மாணவர்களுக்கு பாடமாக இருக்குமாறு அமையவேண்டும்.


V RAMASWAMY
நவ 21, 2024 19:38

மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் கவுன்சிலிங் என்பதனை தவறாக பிரயோகப்படுத்துகிறார்கள். இந்த வார்த்தை கவுன்செலிங் என்று கொள்ளப்படவேண்டும். COUNSELLING என்பதன் பொருள் தான் professional advice and help given to people with problems. சிக்கலில் அல்லது ஒன்றிற்குத் தீர்வு வேண்டும் நிலையில் உள்ளவர்களுக்குத் தரப்படும் தொழில் முறையிலான அறிவுரை/ஆலோசனை மற்றும் உதவி.


D.Ambujavalli
நவ 21, 2024 17:16

சட்டம் ஒழுங்கு, கல்வி எல்லாத்துறைகளும் தேர்தலுக்கு முன் collection முடித்தாகவேண்டும் என்ற ஒரே குறிக்கோளில்தான் செல்கின்றனர் போதைக்கு எதிராக மாணவர்களுக்கு அட்வைஸ், மறுபுறம் பெட்டிக்கடையில் கூட விற்பனை நன்று நிம் கொற்றம்


sridhar
நவ 21, 2024 10:39

பள்ளி மாணவ மாணவியருக்கு ' எல்லாம்' கிடைக்கிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க்கிறது . தினமும் சம்பவங்கள். எல்லாவற்றிற்கும் திமுகவின் ஒரே தீர்வு பணம். தமிழகம் குட்டிச்சுவராகிறது .


VENKATASUBRAMANIAN
நவ 21, 2024 07:59

பள்ளி கல்வி துறை மிகவும் மோசமடைந்தது விட்டது. இதுதான் திராவிட மாடல்


raja
நவ 21, 2024 07:37

திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மற்றும் அல்ல மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் .. முதல்வர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் பெருமிதம் ..


R.MURALIKRISHNAN
நவ 21, 2024 12:53

முதல்வர் தூங்கி கனவு கண்டது போதும். கொஞ்சம் எழுப்பறிங்களா சார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை