மேலும் செய்திகள்
நாளை மின் தடை ரத்து
17-Nov-2026
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அரசு பஸ் பணிமனை முன்பு த.வெ.க., அரசின் தனியார்மயத்தை கண்டித்தும், உசிலம்பட்டி கிளையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யக் கோரியும் சி.ஐ.டி.யு., சார்பில் வாயில் கூட்டம் நடந்தது. மத்திய சங்கத் துணைத்தலைவர் சிவக்குமார் துவக்கி வைத்தார். கிளைத் தலைவர் குமார் தலைமை வகித்தார். புதிய பஸ்களுக்கு உதிரிபாகங்கள் கிடைப்பதில் உள்ள சிரமம், பேட்டரி பிரச்னை, டிக்கெட் இயந்திரம் பழுது உள்ளிட்டவற்றை சரிசெய்ய வேண்டும் என பேசினர். ஓய்வு பெற்ற நிர்வாகி ரவிக்குமார், மா.கம்யூ., ஒன்றியச் செயலாளர் ராமர், அரசு ஊழியர் சங்கம் அய்யங்காளை உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணைப் பொதுச்செயலாளர் சந்திரசேகரன் நிறைவு செய்தார். நிர்வாகி சிவபாண்டியன் நன்றி கூறினார்.
17-Nov-2026