தடகள போட்டி
மதுரை : மதுரை சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் சார்பில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டி மதுரை ஸ்ரீ அரபிந்தோ மீரா பள்ளியில் நடந்தது. இதில் மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் (கே.ஆர்.எஸ்.,) சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் சுதர்சன் 12 வயது ஆடவர் பிரிவு 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்றார். முதல்வர் சூர்யபிரபா, உடற்கல்வி ஆசிரியை தசரதி பாராட்டினர்.