உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கத்தியால் தாக்கி அலைபேசி பறிப்பு

கத்தியால் தாக்கி அலைபேசி பறிப்பு

பேரையூர்: எஸ்.பாரைப்பட்டி சின்னகாளை மகன் தங்கராஜ் 24. இவரும் இவரது சகோதரரும் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து வரும் இவரது உறவினரை அழைத்துச் செல்வதற்காக பேரையூர்--டி.கல்லுப்பட்டி சாலையில் உள்ள கொண்டுரெட்டிபட்டி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தனர். அப்போது 4 டூவீலர்களில் வந்த 8 மர்ம நபர்கள் பட்டாகத்தியால் தங்கராஜை தாக்கி அவரின் சகோதரரிடம் இருந்த அலைபேசியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். காயமடைந்த தங்கராஜ் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி