கொலை முயற்சி தண்டனை
மதுரை : மதுரை பி.பீ.குளம் தங்கம் 27. இவரை குடும்ப பிரச்னை காரணமாக விளாச்சேரி ராஜகோபால்42, ஹார்விபட்டி பஸ் ஸ்டாப் அருகே 2018 ல் கத்தியால் குத்தினார். திருநகர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்தனர். மதுரை கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிபதி அசன் முகமது,'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டார்.