உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா

மதுரை : மதுரை இலக்கிய மன்றம், அருணாச்சலா கல்வி அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு செந்தமிழக்கல்லுாரியில் விருது வழங்கும் விழா நடந்தது. 27 பெண்களுக்கு 'மகளிர் சுடரொளி' விருது வழங்கப்பட்டது.ராமலிங்கா மில்ஸ் நிர்வாக இயக்குநர் கோதை தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்விக்டோரியா கவுரி விருது வழங்கி பேசுகையில், ''பெண்கள் அனைவரும் சமநிலை அடைந்துவிட்டோமா என்று கேட்டால் நாம் போகும் துாரம் மிக தொலைவில் உள்ளது. பெண் இயல்பாகவே ஓர் சுடரொளி தான். அவளுக்கு தனியாக விருது கொடுக்க தேவையில்லை'' என்றார்.டாக்டர் அனுஷா கண்ணபெருமான் உட்பட பலர் பங்கேற்றனர். முதல்வர் சாந்திதேவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ