டாக்டருக்கு விருது
மதுரை : புற்றுநோய் உள்கதிர்வீச்சுக்கான தேசிய (இப்ஸ்கான்) சங்கம் சார்பில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஜாஜர் கிளையில் தேசிய அளவிலான மாநாடு நடந்தது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு கதிர்வீச்சு செலுத்துவதற்கான புதிய உபகரணம் வடிவமைப்பது குறித்த ஆய்வுக்கட்டுரையை மதுரை அரசு மருத்துவக்கல்லுாரியின் கதிர்வீச்சு இயற்பியல் உதவி பேராசிரியர் செந்தில்குமார் சமர்ப்பித்தார். இந்த ஆய்வுக்கட்டுரைக்கு சிறந்த புதுமைக்கான விருது வழங்கப்பட்டது. இவரை மருத்துவக் கல்லுாரி டீன் அருள் சுந்தரேஷ்குமார், டாக்டர் செல்வராணி பாராட்டினர்.