உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் மலையடிவார கிராமங்களில் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாய நிலங்களில் அனுமதி இல்லாமல் மின்வேலி அமைத்து வருகின்றனர். மின்வேலியில் அவ்வப்போது மனிதர்களும் சிக்கி உயிரிழப்பு ஏற்படுகிறது. இதைதவிர்க்க மின்துறையினர் உசிலம்பட்டி மலையடிவார கிராமங்கள் மாதரை, தொட்டப்பநாயக்கனுார், செட்டியபட்டி, இடையபட்டி, வாசிநகர் பகுதிகளில் மின் வேலி அமைப்பது சட்டப்படி குற்றம் என விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். உதவி செயற் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி மின் பொறியாளர் சோனைமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ