மாணவர்களுக்கு விழிப்புணர்வு
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி வணிகவியல் மற்றும் மேலாண்மை துறை சார்பில் மாணவர்களுக்கான தொழில் வாய்ப்புகள், வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். வேலை வழிகாட்டுதல் குழுத் தலைவர் சுமித்ரா வரவேற்றார். முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார். மதுரை ஐ.சி.ஏ. எஜுகேஷன் ஸ்கில் மைய இயக்குனர் ராஜ்மோகன் பேசினார். பேராசிரியர் கார்த்திக் நன்றி கூறினார். பேராசிரியர்கள் பாண்டிய ராஜன், அமிர்தவர்ஷினி ஒருங்கிணைத்தினர்.