விழிப்புணர்வு கூட்டம்
மதுரை: மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம் கோட்ட கலால் அலுவலர் ஆனந்தி தலைமையில் நடந்தது.மதுரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். மாணவர் சமூகத்தை போதைப் பொருட்கள் எவ்வாறு சீரழிக்கும், அதன் பாதிப்புகள் என்ன வென்று எடுத்துரைத்தனர். போலீஸ் அலுவலர் வெங்கடேசன் போதைப் பொருளால் கவனச்சிதறல் குறித்து பேசினார்.தலைமை ஆசிரியர் ஆதிஞானகுமரன் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் ஜோதிபாசு நன்றி கூறினார். ஆசிரியர் முரளிதரன் ஏற்பாடு செய்திருந்தார்.