உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

மேலுார் : மேலுாரில் துருவம் டிரஸ்ட் மற்றும் ஜாஸ் பப்ளிக் பள்ளி இணைந்து மகளிர் தினத்தை முன்னிட்டு பல துறை சாதனையாளர்களை கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.துருவம் டிரஸ்ட் நிறுவனர் பிரீத்தி வரவேற்றார். கிரசன்ட் கல்லுாரி நிர்வாக அதிகாரி ராஜபிரியா, டாக்டர் மேனகா, இயன்முறை டாக்டர் உஷா, ஜாஸ் பள்ளி முதல்வர் ராமமூர்த்தி ராய், ஆர்.ஐ., சிங்காரவேலன், சட்டக் கல்லுாரி பேராசிரியர் தமிழ்மணி, லதாமாதவன் கல்லுாரி நிறுவனர் மாதவன் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி, சமுதாய வளர்ச்சியில் பெண், தொழில் துறையில் பெண்கள், உடல் நலம், சட்ட அணுகுமுறை, பெண்கள் பாதுகாப்பு, அரசு வேலைக்கு வழிகாட்டுதல் பற்றி எடுத்துரைத்தனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை பாராட்டி பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி