விழிப்புணர்வு ஊர்வலம்
மதுரை:மதுரை மாயாண்டிபட்டியில் மாணவர் சேர்க்கை குறித்து அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர், ஆசிரியர்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி லட்சுமிபிரியா துவக்கி வைத்தார். பூசாரிப்பட்டி, சிதம்பரம்பட்டி, பட்டணம்பொருசுபட்டி, ஆரப்பள்ளம், மீனாட்சிபுரம் காலனி, சின்ன மாங்குளம் பகுதிகளில் பிரசாரம் நடந்தது. தலைமையாசிரியர் திவ்யநாதன், ஆசிரியர் பாஸ்கரன், பெற்றோர் பங்கேற்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.