உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

மேலுார்: மேலுாரில் உலக போதை ஒழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் போதையால் பாதை மாறும் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு, மாணவர்களின் பேரணி நடந்தது. மேலுாரில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இ.மலம்பட்டியில் எஸ்.ஐ., வேங்கையன், அசோக், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.ஐ., க்கள் ஜெயபாண்டியன், சாரதா, கருங்காலக்குடி, கொட்டாம்பட்டியில் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !