மேலும் செய்திகள்
தேசிய கருத்தரங்கம்
12-Feb-2026
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் ஏக்தா பெண்களுக்கான ஆதார மையம் சார்பில் பெண் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார கருத்தரங்கம் நடந்தது. விழிப்புணர்வு ஊர்வலத்தைபோக்குவரத்து துணை கமிஷனர் வனிதா துவங்கி வைத்தார். மதுரை காமராஜ் பல்கலை தகவல் தொடர்பியல் துறைத் தலைவர் நாகரத்தினம் வரவேற்றார். இ.கே.டி.ஏ., இயக்குநர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். சமூக நலஅதிகாரி காந்திமதி, அரவிந்த் கண் மருத்துவமனை எச்.ஆர்., மேலாளர் மகாலட்சுமி முன்னிலை வகித்தனர். பெண்களின் சிலம்பாட்டம், நடனம், நாடகம்உள்ளிட்ட கலைநிகழ்ச்சி நடந்தது. பல்கலையின் இலக்கு அமைப்பு இயக்குநர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
12-Feb-2026