உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி போதை பொருள் தடுப்பு குழு, யங் இந்தியன்ஸ் மாமதுரை 2.0, போலீஸ் துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ராம சுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். மதுரை யுவா யங் இந்தியன்ஸ் ஜனனி வரவேற்றார்.‌ போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், எஸ்.ஐ., சிவபிரகாசம் பேசினர். யுவா நோடல் ஆபீசர் பேராசிரியர் அழகேசன் ஒருங்கிணைத்தார். மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். பேராசிரியர் முனியசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்