வங்கி முற்றுகை
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி யூனியன் வங்கியில் 2023ல் மேலாளராக வரப்பிரசாத் இருந்த போது சுய உதவிக்குழு பெண்களின் வங்கி கடன்கள், வைப்புத்தொகை என ரூ.4 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், தங்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டதோடு கடன் தரமறுப்பதாக கூறி நேற்று வங்கியை பெண்கள் முற்றுகையிட்டனர். மேலாளர் சுபாஷ், இன்ஸ்பெக்டர் ஜெயந்தி சமரசம் செய்தனர்.