உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அடிப்படை வசதியில்லா டி.கிருஷ்ணாபுரம்

 அடிப்படை வசதியில்லா டி.கிருஷ்ணாபுரம்

பேரையூர்: பேரையூர் தாலுகா சேடபட்டி ஒன்றியம் டி. கிருஷ்ணாபுரத்தில் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம் தொடர்கிறது. கால்வாய்களை துார் வாராமல் இருப்பதால் கழிவு நீர் செல்ல வழி இன்றி தேங்கி நின்று, துர்நாற்றம் வீசுகிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்களால் துாங்க முடியவில்லை. இப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியோர் வரை அவ்வப்போது காய்ச்சல் வருவதும் மருத்துவமனைக்கும் செல்வது தொடர்கதையாகி வருகிறது. சேடபட்டி ஒன்றிய அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையாக கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்து சுகாதாரம் காக்க வேண்டும். சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sangarapandi
ஆக 19, 2026 11:05

T.கிருஷ்னாபுரம் பகுதி வளர்ச்சி பெறவேண்டும் என்றால், தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் தாழையூத்து கிராமத்தில் இருந்து மதுரை மாவட்டம் மல்லப்புரம் கிராமத்தை இணைக்கும் மலைச்சாலை அமைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்து மல்லபுரம் இடையே புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. இதன் வழியாக ந்து விருதுநகர், பேரையூர், ஏழுமலை, இராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பிரதான சாலை வழியாக செல்லுவதை விட மலைச்சாலையை பயன்படுத்தினால் பயண தூரம் குறைவு என்பதால் வாகன ஓட்டிகள் அனைவரும் மலைச்சாலையை பயன்படுத்த தொடங்கினர். மேலும் காலை, மாலை நேரங்களில் மலைச்சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் இயக்கப்பட்டது. இதனால் மலைச்சாலை வழியாக போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்த சாலையின் முக்கியத்துவம் கருதி 15 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்து மல்லப்புரம் இடையே அரசு மினி பஸ் சேவையும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் மலைச்சாலை அமைக்கப்பட்ட பின்னர் அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்காரணமாக செடிகள் ஆக்கிரமிப்பு மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலையின் அளவு குறுக தொடங்கியது. மேலும் மழையால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இதனால் அரசு பஸ் சேவை தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 10 ஆண்களுக்கு மேல் பராமரிப்பு இல்லாத காரணத்தால் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறியது. மேலும் சாலை குறுகியதால் ஒரே நேரத்தில் ஆட்டோ, கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் கூட விலகி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த மலைச்சாலையின் ஓரங்களில் பெரும்பாலான இடங்களில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்படவில்லை. இதனால் லாரி, வேன் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் ஒன்றை ஒன்று விலகி செல்லும் போது சிறிது கவன குறைவு ஏற்பட்டாலும் பெரிய அளவில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே விபத்து அச்சத்தால் பெரும்பாலன வாகன ஓட்டிகள் மலைச்சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். தற்போது மலைச்சாலை வழியாக பைக்குகள் மட்டுமே அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. 8 கிமீ தொலைவுடைய மலைச்சாலையில், தேனி மாவட்ட எல்லை வரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. மதுரை மாவட்ட கட்டுபாட்டில் உள்ள மீதமுள்ள 7 கிமீ தொலைவு சாலை தொடர்ந்து சீரமைக்கப்படாமல் உள்ளது . மதுரை மாவட்டம் எழுமலை, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களுக்கு உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக அமைக்கப்பட்டுள்ள பிரதான சாலை வழியாக சென்றால் 70 கிமீ தொலைவு செல்ல வேண்டும். ஆனால் மல்லப்புரம் மலைச்சாலையை பயன்படுத்தினால் 20 கிமீ தொலைவில் கிராமங்களுக்கு சென்று விடலாம். தற்போது சாலை அதிக சேதமடைந்து அபாயகரமான நிலையில் காணப்பட்டாலும் பயண நேரம் மற்றும் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு பெரும்பாலும் மலைச்சாலையை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே இரண்டு மாவட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து மல்லப்புரம் மலைச்சாலையை சீரமைக்க வேண்டும்’’ எத்தனயோ பெரிய போக்குவரத்து வழித்தடங்களை அமைத்துவரும் மத்திய அரசு தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா மல்லப்புரத்திலிருந்து தேனி மாவட்டம் வருசநாடு வரை மலைப்பாதையில் உள்ள குறுகிய வழித்தடத்தை அகலப்படுத்தி பஸ் போக்குவரத்திற்கு ஏற்பாடு மத்திய அரசே ஏதாவது ஒரு சிறப்பு திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்திடவும் T.கிருஷ்னாபுரம் பகுதிகள் வளர்ச்சி பெறவும் ஏற்பாடு செய்ய வேண்டுகிறன்.s.சங்கரபாண்டி, s. தொட்டணம்பட்டி ,மதுரை மாவட்டம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை