விவசாயிகளுக்கு தேனீப் பெட்டிகள்
மதுரை : 'மத்திய அரசின் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கறவை மாடு, தேனீப்பெட்டிகள் வழங்கப்பட உள்ளது' என, வேளாண் துணை இயக்குநர் அமுதன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இத்திட்டத்தில் வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம், அலங்காநல்லுார், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி, மேலுார், கொட்டாம்பட்டியில் மானாவாரி சாகுபடி செய்யும் 400 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒரு விவசாயிக்கு தலா ஒரு எக்டேர் வீதம் 400 எக்டேரில் பயிர் சாகுபடி இடுபொருட்களுக்கு ரூ.2000 மானியம், மண்புழு உரப்படுக்கை அமைக்க ரூ.12 ஆயிரம், மாடு வாங்க ரூ.20 ஆயிரம், வீடுகளில் பழமரக்கன்று வளர்ப்பு, தேனீப்பெட்டி உட்பட ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் பண்ணைய பயற்சி அளித்துள்ள நிலையில் தேனீப்பெட்டி, மண்புழு உரப்படுக்கை அடுத்த வாரம் வழங்கப்படும் என்றார்.