பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் செப். 11 முதல் 16 பெட்டிகள்
மதுரை: பயணிகளின் வரவேற்பு காரணமாகவும், பண்டிகை காலத்தை முன்னிட்டும் மதுரை - பெங்களூரு - மதுரை 'வந்தே பாரத்' ரயில் (20671/20672), செப்., 11 முதல் 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செவ்வாய் தவிர்த்து தினமும் அதிகாலை 5:15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரயில், மதியம் 1:00 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் செல்கிறது. மறுமார்க்கத்தில் மதியம் 1:30 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9:40 மணிக்கு மதுரை வரும். முற்றிலும் குளிரூட்டப்பட்ட 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் இந்த ரயில் செப்., 11 முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது.