| ADDED : பிப் 04, 2024 03:55 AM
வாடிப்பட்டி : பரவை மங்கையர்கரசி மகளிர் கல்லுாரி, உரத்த சிந்தனை சார்பில் பாரதி நுாற்றாண்டு விழாவாக 'பாரதி உலா' என்ற நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். இயக்குநர் சக்தி பிரனேஷ் முன்னிலை வகித்தார்.தமிழ்த்துறை தலைவர் ஜெயபூர்ணிமா வரவேற்றார்.முதல்வர் உமா பாஸ்கர், கல்வித்துறை தலைவர் செந்துார் பிரியதர்ஷினி, கலைப்புல தலைவர் சுகந்தி, இதழ் ஆசிரியர் மீரான், விஞ்ஞானி, எழுத்தாளர் நெல்லை முத்து பங்கேற்றனர். இதழ் ஆசிரியர் உதயம் ராம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். சினிமா இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் மாணவிகள் தன்னம்பிக்கை, தைரியம், ஈடுபாடு, ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாரதியார் புத்தகம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கவிஞர் இரா.கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.