| ADDED : பிப் 01, 2024 04:16 AM
மதுரை : ''மதுக்கடைகளால் முறைசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதால் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும்'' என பாரதிய மஸ்துார் சங்க மாநில மாநில அமைப்புச் செயலாளர் தங்கராஜ் கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது: சங்கத்தின் மாநில மாநாடு பிப்.3, 4ல் திருப்பரங்குன்றத்தில் நடக்கிறது. மதுரை ஆதீனம், தேசிய துணைத்தலைவர் மல்லேசம் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் மதுக்கடைகள் செயல்படுவதால் முறைசாரா தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கின்றனர். அவர்கள் சம்பாதிப்பதில் முக்கால் பங்கு மதுக்கடைகளுக்கே சென்றுவிடுகிறது. எனவே தமிழகத்தில் மதுக்கடைகளை உடனடியாக இல்லாவிடினும் படிப்படியாக மூட வேண்டும்.அரசு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே அவர்களை இம்முறையை தவிர்த்து நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், அரசு போக்குவரத்து ஊழியர்கள் என எல்லா தரப்பினருமே போராட்டம் நடத்துகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுவோம், என்றார். மாவட்ட தலைவர் அன்பழகன, செயலாளர் ரமேஷ் உடனிருந்தனர்.