சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமிபூஜை
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் பேரூராட்சியில் ரூ 5.12 கோடியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை நடந்தது.அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். கலெக்டர் சங்கீதா, வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் ஜெயலட்சுமி வரவேற்றார். தி.மு.க., அவைத்தலைவர் பாலசுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, துணைத் தலைவர் சுவாமிநாதன், நகர செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன் பங்கேற்றனர். தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனையை அமைச்சர் திறந்து வைத்தார். கலெக்டர், எம்.எல்.ஏ., கால்நடை மருத்துவத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.