சைக்கிள் வழங்கும் விழா
திருமங்கலம்: திருமங்கலம் பி.கே.என்., ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளித் தலைமையாசிரியர் ஜெயசாந்தினி வரவேற்றார். செயலாளர் பார்த்திபன் தலைமை வகித்தார். பொருளாளர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் ரம்யா 281 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார். துணைத் தலைவர் ஆதவன், கவுன்சிலர்கள் சின்னச்சாமி, ஜமீலாபவுசியா, முத்து காமாட்சி மற்றும் ஆசிரியர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் பாண்டி நன்றி கூறினார்.