உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ரன்வே அருகே பறவை தடுப்பு கருவிகள்: கலெக்டர் ஆய்வு

 ரன்வே அருகே பறவை தடுப்பு கருவிகள்: கலெக்டர் ஆய்வு

மதுரை: மதுரை விமான நிலையத்தின் ரன்வே அருகே பறவைகள் வருவதை ஒலி எழுப்பி தடுக்கும் கருவிகள் அமைக்கப்பட உள்ளதை கலெக்டர் பிரவீன் குமார் ஆய்வு செய்தார். விமான நிலையத்தில் உள்ள சுற்றுச்சூழல் மேலாண்மை குழு (இ.எம்.சி.,) என்ற அமைப்பின் ஆய்வுக் கூட்டம் நிலைய இயக்குனர் முத்துக்குமார் தலைமையில் நடந்தது. கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி அதிகாரிகள், விமானநிலைய அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் விமான நிலையம் பகுதியில் சுற்றுச்சூழலை பாதிக்காத நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விமானநிலைய பகுதியில் குப்பை இருந்தால் பறவை வரும் வாய்ப்பு அதிகம். அவற்றால் விமானங் களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் அவற்றை விரட்டுவதற்காக 8 புதிய கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இக்கருவிகளை ஆய்வு செய்த கலெக்டரிடம் 'இக்கருவிகள் ரன்வேயின் இருபுறமும் நிறுவப்பட்டு, அவற்றில் இருந்து எழும் ஒலியால் பறவைகள் ரன்வே பகுதிக்கு வராது' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை