உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பா.ஜ.,வினர் கொண்டாட்டம்

 பா.ஜ.,வினர் கொண்டாட்டம்

மதுரை: பீகாரில் தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து மதுரை பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். முனிச்சாலை பகுதியில் நகர் தலைவர் மாரிசக்ரவர்த்தி தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி, மேளதாளத்துடன் நடனமாடியும் கொண்டாடினர். மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் பிரிவு தலைவர் குருரமேஷ்குமார், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் இனிப்பு வழங்கினர். பா.ஜ., ஆன்மிக மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் சிவபிரபாகர் தலைமையில் மீனாட்சி அம்மன் கோயில் பக்தர்களுக்கு கட்சியினர் இனிப்பு வழங்கினர். உசிலம்பட்டியில் பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர், மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்த பா.ஜ.,வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாநில செயலாளர் கதலிநரசிங்கபெருமாள், பெருங் கோட்ட அமைப்பு பொறுப்பாளர் ராமசேகர், மாவட்டச் செயலாளர் தீபன்முத்தையா, கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் மொக்கராஜ், நகர்தலைவர் சவுந்தரபாண்டியன், கல்வியாளர் பிரிவு தலைவர் பிரசாத் கண்ணன், சிறுபான்மை பிரிவு தலைவர் ரெஜினாமேரி, நிர்வாகிகள் சிவமுருகன், தினகரன், இளையராஜா, வனராஜா, போஸ், மயில்ராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி