மேலும் செய்திகள்
கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை
10-Mar-2025
மதுரை : மதுரையில் காரில் இறந்த நிலையில் பா.ஜ., செயலாளர் கருப்பசாமி உடல் கண்டெடுக்கப்பட்டது. இறப்பில் சந்தேகம் இருப்பதாக பா.ஜ.,வினர் தெரிவித்துள்ளனர்.மதுரை எஸ்.ஆலங்குளம் டிசைன் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி 38. பா.ஜ., செல்லுார் மண்டல ஓ.பி.சி., அணி செயலாளர்.கால் டாக்ஸி டிரைவரான இவர், இரு நாட்களுக்கு முன் இரவு வீட்டை விட்டு புறப்பட்டவர் திரும்பவில்லை. நேற்று காலை மதுரை கூடல்புதுார் சர்ச் அருகே காரில் இறந்துகிடந்தார்.இவருக்கு மனைவி, இரு மகள்கள்உள்ளனர். கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.கருப்பசாமி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த மனுவில், கருப்பசாமி இறப்பதற்கு முன் அவரை கூடல்புதுார் பகுதி ஆம்னி வேன் டிரைவர்கள், ஓட்டல் கடைக்காரர்கள் தாக்கியுள்ளனர். எனவே அவர் எப்படி இறந்தார், யாரால் இறந்தார் என விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதற்கிடையே பிரேத பரிசோதனையில் கருப்பசாமி மூச்சு திணறலால் இறந்தது தெரியவந்தது.எதனால் மூச்சு திணறல் ஏற்பட்டது என்பதை அறிய உடல் உறுப்புகள் திசு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார்.
10-Mar-2025