உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

திருமங்கலம் : திருமங்கலம் கம்பன் கழகம், இலக்கிய பேரவை, அய்யாதுரை செல்லத்தாய் அறக்கட்டளை இணைந்து டாக்டர் அய்யாதுரை எழுதிய கலங்கான் கவிதைகள் நுால் வெளியீட்டு விழா நடந்தது. கம்பன் கழகத் தலைவர் அழகர்நாதன் தலைமை வகித்தார். இலக்கிய பேரவைத் தலைவர் பூலோக சுந்தர விஜயன் முன்னிலை வகித்தார். பேரவை செயலாளர் சங்கரன் வரவேற்றார்.முன்னாள் எம்.பி., சித்தன் நுாலை வெளியிட, எஸ் கோட்டைப்பட்டி பராசக்தி கல்வி குழும தாளாளர் ஜெகதீசன் பெற்றார். பேராசிரியர் சங்கீத் ராதா நுால் மதிப்புரை வழங்கினார். காந்தி நிகேதன் பள்ளித் தலைவர் ரகுபதி உட்பட பலர் பங்கேற்றனர். கம்பன் கழகப் பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி