புத்தகம் வெளியீடு
அழகர்கோவில்: மதுரை அழகர்மலை கிழக்கு அடிவாரம் ஆத்மநாதபுரத்தில், சத்தீஸ் குருதேவ் குருகுலம் பவுண்டேஷன் சார்பில், புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதழாசிரியர் நேதாஜி சுவாமிநாதன் தலைமை வகித்தார். 'என் பயணமே உங்கள் பலம்' புத்தகத்தை காந்தி மியூசியம் நிர்வாகி தேவதாஸ் காந்தி வெளியிட, மேலுார் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லப்பாண்டி, சாத்தமங்கலம் மண்டல துணை தாசில்தார் சிங்கார வேலன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகவேல் பெற்றனர். ஹிந்து தமிழ் மக்கள் வளர்ச்சி விழிப்புணர்வு கழக தலைவர் மூவேந்திர சிவா, மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் ராமச்சந்திரன், ஹிந்து மகாசபா மாநில துணை தலைவர் செல்லத்துரை, டாக்டர் அமுதா கலாவள்ளி, யோகா மாஸ்டர்கள் அருண்குமார், கண்ணன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் சரவணக்குமார் பேசினர். ஆசிரியர் சண்முக திருக்குமரன் நடுவராக பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது. மருத்துவம், ஆன்மிகம், கல்விப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய சேவையாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.