நுாலகத்திற்கு நுால்கள்
திருமங்கலம் : திருமங்கலம் ஒன்றியம் சமத்துவபுரத்தில் உள்ள நுாலகத்திற்கு 'யங் இந்தியன்' தொண்டு நிறுவனம் மூலமாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஒன்றிய அலுவலர் சந்திரகலா, மண்டல துணை வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன், ஊராட்சி செயலாளர் லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.