மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்..
31-Dec-2024
மதுக்கடையை அகற்ற அலுவலகம் முற்றுகை
10-Jan-2025
திருமங்கலம்: திருமங்கலம் அருகே பொன்னம்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வ பெருமாள், அபிராமி தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் ராஜ முகிலன் 2.நேற்று நாற்றுச் சோளம் அறுவடைக்காக இருவரும் வேலைக்கு சென்றனர். மாலை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரின் டிராக்டரில் வீட்டுக்கு வந்தனர். டிராக்டரை அப்பகுதி கருப்பையா ஓட்டி வந்தார். இவர்கள் வீட்டின் அருகே டிராக்டர் வந்தபோது, பெற்றோர் இருவரும் டிராக்டரில் வருவதை பார்த்த சிறுவன் ராஜ முகிலன் மகிழ்ச்சியால் டிராக்டரை நோக்கி ஓடிச் சென்றார். எதிர்பாராத விதமாக டிராக்டர் சக்கரத்தில் சிறுவன் சிக்கிக் கொண்டான். டிராக்டரை நிறுத்தி சிறுவனை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் சிறுவன் பலியானார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
31-Dec-2024
10-Jan-2025