பிராமணர் சங்கம் சிறப்பு முகாம்
மதுரை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் புதுார் கிளையின் சார்பில் பாரத பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்திற்கான பதிவுக்கா 2 நாள் முகாம் சர்வேயர் காலனி தபால் அலுவலகம் அருகில் சுபாஷணி நகரில் துவங்கியது. மாநில துணைத்தலைவர் அமுதன், கோபாலசாமி துவக்கி வைத்தனர். இன்றும் முகாம் நடக்கிறது. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் ஆதார் அட்டையுடன் கலந்து கொண்டு ரூ.5 லட்சம் வரையிலான காப்பீடுக்கு பதிவு செய்து கொள்ளலாம்.