புத்த பிக்குகள் மேற்கொள்ளும்அமைதிக்கான நடை பயணம்
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் 18 நாடுகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி புத்தமத வழிபாட்டில் ஈடுபட்டனர். இதையடுத்து நடை பயணமாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புத்த கோயிலுக்கு சென்று வழிபட உள்ளனர். இதில் கனடா, அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 18 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.மதுரையில் அவர்களை, காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், பொருளாளர் செந்தில்குமார், கல்வி அலுவலர் நடராஜன், அனுஷத்தின் அனுக்கிரக அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் வரவேற்றனர். புத்த பிக்கு லீலாவதி கூறுகையில், உலகில் அமைதியை பரப்ப வேண்டும் என்பதற்காக இந்நடைப்பயணம் மேற்கொண்டுள்ளோம். சங்கரன்கோவிலில் பிப்.,17 ல் வழிபாடு நடத்த உள்ளோம் என்றார்.