உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாட்டு வண்டிப் பந்தயம்

மாட்டு வண்டிப் பந்தயம்

மேலுார்: கொட்டாணிப் பட்டி மந்தை கருப்பணசுவாமி கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் சார்பில் மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தது.பெரிய மாடு பந்தயத்தில் 13 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் கொட்டாணிப் பட்டி தினேஷ் கார்த்திக், ஜெய்ஹிந்த்புரம் அக்னி முருகன், கொட்டாணிப்பட்டி சீமான் பார்த்தசாரதி, புலி மலைப்பட்டி கார்த்திகேயன் மாடுகள் முறையே, முதல் 4 பரிசுகளை வென்றன.சிறிய மாடுகள் பந்தயத்தில் 23 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.புலி மலைபட்டி மடகருப்பசாமி, தேனி சரவணன் முதல் பரிசையும், வெள்ளரிப்பட்டி மனோஜ், கீழவளவு சக்தி இரண்டாம் பரிசையும், உறங்கான்பட்டி கதிரேசன், தேனி சரவணன் மூன்றாம் பரிசையும், வெள்ளநாயகம் பட்டி ராமையா, கொட்டாணிபட்டி செல்லையா மாடுகள் நான்காம் பரிசையும் வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை