மேலும் செய்திகள்
மாட்டு வண்டி பந்தயம்
05-Oct-2025
மேலுார் : வெள்ளலுார் நாட்டில் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பந்தய மாட்டின் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாட்டு வண்டிப் பந்தயம் நடந்தது.பெரிய மாடுகள் பந்தயத்தில் 13 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. திருநெல்வேலி கண்ணன், கோட்டநத்தம்பட்டி கஜேந்திரன், புதுக்கோட்டை தர்ஷன், புலி மலைப்பட்டி முனிசாமி மாடுகள் முதல் நான்கு பரிசைகளை வென்றன.சிறிய மாடுகள் பந்தயத்தில் 31 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் புலி மலைப்பட்டி கிட்டு, கொட்டாணிபட்டி சீமான் பார்த்தசாரதி, புலி மலைப்பட்டி முனிச்சாமி, உறங்கான்பட்டி கதிரேசன் மாடுகள் முதல் நான்கு பரிசுகளை வென்றன.
05-Oct-2025