உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மாட்டு வண்டி பந்தயம்

 மாட்டு வண்டி பந்தயம்

மேலுார்: புலிமலைப்பட்டியில் முனிச்சாமி, பாலமுருகன் கோயில் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு கிராம மக்கள், இளைஞர்கள் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு பந்தயத்தில் 10 ஜோடி, நடமாடு பந்தயத்தில் 14 ஜோடி, சிறிய மாடு பந்தயத்தில் 25 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பெரிய மாடு பந்தயத்தில் வேலங்குளம் கண்ணன், புலிமலைபட்டி முனிச்சாமி, நரசிங்கம்பட்டி முத்துராமலிங்கம் மாடுகள் 4 பரிசுகளை வென்றன. நடுமாடு பந்தயத்தில் புலிமலைபட்டி மடை கருப்பு, கருப்பையா, கண்ணன், முனிச்சாமி மாடுகள் 4 பரிசுகளை வென்றது. சிறியமாடு பந்தயத்தில் 25 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. முதல் பரிசை புலிமவைபட்டி அய்யனார், குப்பச்சிப்பட்டி அரசகுமார், 2ம் பரிசை மட்டங்கி பட்டி காவ்யா, கோட்டநத்தம்பட்டி ராமகிருஷ்ணன், 3ம் பரிசை புலிமலைப்பட்டி சத்தியா, கோட்ட நத்தாம்பட்டி சிவபாலன் மாடுகள் வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ