பஸ் மோதி குழாய் சேதம்
அவனியாபுரம்: மதுரை அவனியாபுரத்தில் இருந்து நேற்று காலை அரசு டவுன் பஸ் பயணிகளுடன் ஆரப்பாளையம் சென்றது. பெரியார் சிலை அருகே சென்றபோது எதிரே வந்த டூவீலர் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை திருப்பியபோது தரைப்பாலத்தின் மீது மோதி நின்றது. பாலத்தின் அருகில் இருந்த முல்லைப் பெரியாறு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். குடிநீர் குழாயை மாநகராட்சி பணியாளர்கள் சீரமைத்தனர். ஐந்திற்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயமடைந்தனர்.