மேலும் செய்திகள்
ஊருக்குள் பஸ் வராததால் மறியலில் ஈடுபட்ட மக்கள்
18-Sep-2025
அவனியாபுரம் : மதுரை வளையங்குளத்தில் நேற்று மீண்டும் ஒரு மணி நேரம் பஸ் மறியல் நடந்ததால் போக்குவரத்து தடைபட்டு மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மதுரை - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வலையங்குளம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. பாலத்தின்கீழ் வாகனங்கள் செல்வதற்காக 20 அடி அகலத்தில் பாதை அமைக்கப்படுகிறது. அந்த பாதையை 40 அடி அகலத்தில் அமைக்க வேண்டும் என செப். 24ல் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அன்று இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. வலையங்குளம் முதல் பஸ் ஸ்டாப் பகுதியிலும் மேம்பாலத்தின் கீழ் வாகனங்கள் செல்ல பாதை அமைக்க வேண்டும் என்றும் நேற்று காலை காலனி பகுதி மக்கள் ஒரு மணி நேரம் பஸ் மறியலில் ஈடுபட்டனர். ரோட்டின் இருபுறமும் 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் நின்றன. பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள் தேர்வுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமலும், பொதுமக்கள், நோயாளிகளும் கடும் அவதி அடைந்தனர். பெருங்குடி போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
18-Sep-2025