உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாலம் பணியால் பஸ்கள் தயக்கம்

பாலம் பணியால் பஸ்கள் தயக்கம்

பேரையூர்: பேரையூர்- - உசிலம்பட்டி ரோட்டில் பெரியபூலாம்பட்டி விலக்கு உள்ளது. இந்த விலக்கிலிருந்து பெரியபூலாம்பட்டி 3 கி.மீ., தொலைவில் உள்ளது. புதிதாக பாலம் கட்ட பழைய பாலத்தை அகற்றினர். இதனால் ஒரு வாரமாக பெரியபூலாம்பட்டி, முத்துநாகையாபுரம், குருப்பநாயக்கன்பட்டி, மத்தக்கரை பகுதிகளுக்கு திருமங்கலம், உசிலம்பட்டி, டி.கல்லுப்பட்டியிலிருந்து செல்ல வேண்டிய பஸ்கள் செல்லவில்லை. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பொதுமக்கள் 3 கி.மீ., நடந்து செல்கின்றனர்.மாற்றுப் பாதை இருந்தும் பஸ்கள் புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது. பஸ்களை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !